28 September 2011

நேபாள விமான விபத்தில் பலியான 8 பேர் உடல்கள் திருச்சி வந்தது : பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி !




நேபாள விமான விபத்தில் பலியான கட்டுநர் சங்க நிர்வாகிகள் 8 பேரின் உடல்களும் இன்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டது.
அவர்களது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் இறுதிச் சடங்குகள் நடக்கிறது.
அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 23-ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்கச் சென்றிருந்த இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி கிளை தலைவர் மணிமாறன் (58), நிர்வாகிகள் மருதாசலம் (68), தியாகராஜன் (48), தனசேகரன் (44), கிருஷ்ணன் (72), மீனாட்சி சுந்தரம் (50), மகாலிங்கம் (55), கனகசபேசன் (70) ஆகிய 8 பேர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர். 
எவரஸ்ட் சிகரத்ப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது நடந்த விமான விபத்தில் இவர்கள் 8 பேர் உள்பட 19 பேர் பலியாயினர். இவர்களது உடல்கள், நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை எடுத்து வரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 4 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடல்கள் ஏற்றப்பட்டு இன்று காலை 7.10 மணிக்கு திருச்சி கொண்டு வரப்பட்டது.




தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், பொது மக்கள் அஞ்சலிக்காக உடல்கள் வைக்கப்பட்டன. 
கட்டுமான தொழிலாளர்கள், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று 8 பேரின் உடல்களுக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் சிவபதி, எம்.பி. குமார், எம்எல்ஏ மனோகரன், மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வேலு, செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் சேகரன், பரணிகுமார், பா.ஜ. மாநகர செயலாளர் பார்த்திபன், தேமுதிக மாநகர செயலாளர் விஜயராஜன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காலை 8.30 மணி அளவில் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்குகள் அவரவர் வீட்டில் இன்று மாலை நடக்கிறது.

திருச்சி.... சரிந்தது சிவில் சாம்ராஜ்யம்!




நேபாளத்தில் விமான விபத்து, 19 பேர் பலி என்று முதலில் செய்தி வந்தபோது….. வழக்கமான வலியும் வருத்தமுமே மிஞ்சி நின்றது.
ஆனால், அதற்குப் பிறகு…..
அவர்கள் அனைவருமே நம் ஊர்க்காரர்கள் என்று அடையாளம் காணப்பட்டபிறகு வலி இரட்டிப்பானது.
என்ன ஒரு கொடுமையான செய்தி? தில்லைநகர் மட்டுமல்ல, திருச்சியே இன்னும் அந்த வலியிலிருந்து மீளமுடியாத நிலை.




நேபாளத்தில் உள்ள “புத்தா ஏர்’ என்ற தனியார் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான, பி.ஹெச்.ஏ. 103 என்ற சிறிய ரக விமானத்தில் 19 சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பயணித்தனர்.
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதை ஒட்டிய சிகரங்களையும், மலையழகையும் சுற்றிப் பார்க்க இவர்கள் சென்றனர்.




இந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது, காலை 7.30 மணியளவில், கோதண்ட மலையில் மோதி விமானம் வெடித்துச் சிதறியது.
விமான நிலையத் தொடர்பு அறையுடன் தொடர்பை இழந்த சில மணித்துளிகளில், விமானம் விபத்துக்குள்ளானது.




வெடிப்பதற்கு முன்பாக விமானம் பற்றி எரிந்ததாக உள்ளூர் தொலைக்காட்சிகள் தெரிவித்தன.
விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவுக்கு கிழக்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணு நாராயணர் கோயிலுக்கு அருகில் உள்ளது.




இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 19 பேரும் உயிரிழந்தனர். இதில் 10 இந்தியர்கள், 2 அமெரிக்கர்கள் , ஒரு ஜப்பானியர் உள்ளிட்ட 13 வெளிநாட்டினர் அடங்குவர். 3 நேபாள நாட்டவர்களும், 3 விமான ஊழியர்களும் உயிரிழந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், காத்மாண்டுவில் இருந்து ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் அங்கு வந்து சிதறிக் கிடந்த உடல்களை மீட்டிருக்கின்றனர்.




விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் உருக்குலைந்து இருந்ததால், உடனடியாக அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான், இறந்தவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்த கட்டுனர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எனத் தெரியவந்திருக்கிறது.




அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 23ம் தேதி நடந்தது. இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி கிளைத் தலைவர் இன்ஜினியர் மணிமாறன் (58), ரோகினி பில்டர்ஸ் உரிமையாளர் இன்ஜினியர் மருதாசலம் (68), ஜோதி பைல் பவுன்டேசன் உரிமையாளர் தியாகராஜன் (48), மெர்க்குரி பில்டர்ஸ் உரிமையாளர் தனசேகரன் (44), பாலக்கரை மாரியப்பா ஜவுளி கடை உரிமையாளர் கிருஷ்ணன் (72), மீனா பிராபர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் (50), கான்ட்ராக்டர் காட்டூர் மகாலிங்கம் (55), கட்டிட மதிப்பீட்டாளர் இன்ஜினியர் கனகசபேசன் (70) உள்பட 12 பேர் டெல்லி பொதுக்குழுவில் பங்கேற்றனர்.




கூட்டம் முடிந்த பின் 4 பேர் மட்டும் அங்கிருந்து திருச்சி திரும்பிவிட்டனர். மற்ற 8 பேரும் டெல்லியில் தங்கி இருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போதுதான் இந்தக் கோரவிபத்து நடந்துவிட்டது.
விபத்தில் இறந்த 8 பேரின் உடல்களும் உருக்குலைந்து இருப்பதால், அவர்களை அடையாளம் கண்டு திருச்சி கொண்டு வர முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் திருச்சி எம்.பி.குமார் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் என 10 பேர் காத்மாண்டு சென்றுள்ளனர். (தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவும் உடன் இணந்து ஆவண செய்து வருகிறார்).




இறந்தவர்களில் 4 பேரின் சட்டை பாக்கெட்டில் வாக்காளர் அடையாள அட்டை இருந்ததால் சுலபமாக அவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டனர். மற்ற 4 பேரை அவரது உறவினர்கள் அடையாளம் காண்பார்கள். இன்றிரவே உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நாளை திருச்சிக்குக் கொண்டுவரப்படும் என்றும், 8 பேரின் உடல்களும் திருச்சி தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும்பொருட்டு 2 மணி நேரம் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஒரே நேரத்தில்….. ஒட்டுமொத்தமாக எட்டுப்பேரைப் பறிகொடுக்க வைத்து, கட்டுனர்கள் சங்கத்தையே கலகலத்துப் போகவைத்துவிட்ட காலனை எவ்வகையிலும் மன்னிக்கமுடியாது.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?

26 August 2011

பொண்ணுங்கன்னா சும்மாவா?….


உங்களில் யாருக்காவது வால்பாறை போய்வந்த அனுபவம் இருக்கிறதா?
அப்படி உங்களில் யாராவது போய்வந்திருந்தால்… அது ஒரு மறக்க முடியாத அனுபவமாகத்தான் இருந்திருக்கும். (பேருந்தில் சென்று வந்தவர்களுக்கு மட்டும்).
பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்குப் புறப்படும் பஸ்ஸில் இடம் பிடித்து ஏறுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். அதேபோலத்தான் அங்கிருந்து திரும்பும்போதும். எல்லா விதமான வித்தைகளையும் காட்டினால்தான் கொஞ்சமாவது இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
பேருந்துகள் குறைவு, பயணிகளின் எண்ணிக்கையோ பலமடங்கு அதிகம்.
இங்கே படத்தில் பாருங்கள்… தாவிக்குதித்து ஏறுவதற்கு ஒரு பெண்சிங்கம் தயாரகிகொண்டிருப்பதை. யோசனை பண்ணிக்கிட்டு இப்படியே நின்னுக்கிட்டிருந்தா கதைக்கு ஆகாது, ஏறும்மா…. என்று உடனிருப்பவர்களே உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்புறம் என்ன தயக்கம்? ஒன்…டூ…த்ரீ…ஸ்டார்ட்…

கால்வைத்து ஏறுவதற்கு டீசல் டேங்க் இருக்கு…  கைவத்துத் தூக்கிவிடறதுக்குப் பக்கத்து சீட்டில பசங்க இருக்காங்க…  வேறென்ன வேணும்?
என்ன.. உடம்பு கொஞ்சம் ஒல்லியா இருந்திருந்தா, ஏறுவதிற்கு இன்னும் கொஞ்சம் ஈஸியா இருந்திருக்கும்.
ஒருவேளை… பொண்ணு சுமாரா இருந்தா தூக்கிவிட மாட்டாங்குளோ?

அப்பாடா… ஒருவழியா உள்ளே நுழைஞ்சாச்சு. சர்க்கஸ்காரி மதிரியில்ல தாவவேண்டியிருக்கு?
அதுசரி… இதைப்போயி இப்படிப் பாக்கறாங்களே?
ஏறுவதைத்தான் பார்க்கிறாங்களா? இல்லே வேற எதையாவது பார்க்கிறாங்களா?  நல்லவேளை, இன்னைக்குன்னு பாத்து சுடிதார் போட்டுக்கிட்டு வந்தது நல்லதாப்போச்சு.

23 August 2011

Can you guess what's special in these Photos?...

How many horses are there in this picture? 
Should find seven??



 In the forest there are five hidden deers.......
Can you find all of them???



How many pillers are there ,three or two ????? 
Look at the middle column. Where does it end?



Can you find the praying Woman and Child?



Can you guess what's special in this Picture...



U.PRITHVI...


20 August 2011

5 கோடி மதிப்புள்ள அதிநவீன பஸ்சில் ஒபாமா!




பொருளாதார வீழ்ச்சியால் சரிந்து கொண்டிருக்கும் தனது செல்வாக்கை மீட்டெடுக்கும் யாத்திரையைத் தொடங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. 
அமெரிக்கப் பொருளாதார மீட்சி தொடர்பான ஆய்வு என்ற பெயரில் ஒபாமா மேற்கொண்டுள்ள இந்த பஸ் பயணத்திற்காக ரூ.5 கோடியில் அதி நவீன வசதிகள் கொண்ட சொகுசு பஸ்சை உருவாக்கியுள்ளனர். 
அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால், அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார். சரியான திட்டமிடுதல் இல்லாத அவரது கொள்கைகளின் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதாக அமெரிக்கா முழுவதும் அவர் மீது அதிருப்தி அலை வீசுகிறது. 




இந்த நிலையில், தனது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் வகையில் மக்களை நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்க அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதால், அவருக்காக நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு என்னவோ நம்ம ஊர் சென்னை டூ பெங்களூர் ஆம்னி பஸ் போலத்தான் இது தெரிகிறது. 


ஆனால் பக்கா பாதுகாப்பு வசதிகளுடன் இதை வடிவமைத்துள்ளனர். இந்த பஸ்சில்தான் அவர் தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார். முழுக்க முழுக்க கறுப்பு வண்ணத்தில் இந்த பஸ் மிளிர்கிறது. ரசாயண தாக்குதல் மற்றும் குண்டு வெடித்தால்கூட பஸ்சில் ஒரு சிறு துரும்பு கூட சேதமடையாது. புல்லட் புரூப் கொண்ட கண்ணாடி மற்றும் பாகங்களால் பஸ்சின் பாடி வடிவமைக்கப்பட்டுள்ளது. 


டயர்களும் பஞ்சர் புரூப் தொழில்நுட்பம் கொண்டது. தவிர, பஸ்சுக்குள் சிறிய ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சிறிய சமையலறை, ஓய்வு அறை ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. வயர்லெஸ் டெலிபோன் மற்றும் செயற்கைகோள் தொடர்பு வசதிகளும் இருக்கிறது. 


இந்த பஸ்சை கனடாவை சேர்ந்த பிரபல பஸ் பாடி பில்டிங் நிறுவனமான பிரெவோஸ்ட் வடிவமைத்துள்ளது. உள்ளலங்காரம் மற்றும் வசதிகளை ஹெம்பில் பிரதர்ஸ் கம்பெனி வடிவமைத்துள்ளது. ரூ.5 கோடி மதிப்பில் இந்த பஸ் கட்டப்பட்டுள்ளது. 
அமெரிக்க புலனாய்வு துறையினரின் ஒரு டஜன் கார்கள் புடைசூழ அதிபர் ஒபாமா இந்த பஸ்சில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 


நம்ம ஊரு அரசியல்வாதிகளுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைத்துவிட்டது......

17 August 2011

சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா?

சின்ன வயதிலிருந்தே சிவில் இஞ்சினியர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவெல்லாம் எனக்கில்லை.
ஆர்.எஸ்.கே.யில் படிக்கும்போதெல்லாம் எப்படியாவது ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டால் பரவாயில்லை என்றுதான் அடிக்கடி நினைக்கத் தோன்றியது.
ஆனால்... அதையும் படித்துவிட்டு-- ஆன்னா ஆவன்னா தெரியாத மந்திரிக்கெல்லாம் கார் கதவைத் திறந்துவிடுகிற கொடுமையை நினைத்தால்..... அதன்மீது வெறுப்புத்தான் வந்தது..
இதுமட்டும் என்ன யோக்கியமா? என்று கேட்கத் தோன்றும். பொதுப்பணித்துறைக்குப் போனால் இதுவும் அப்படித்தான்.
அக்கரைக்கு இக்கரைப் பச்சை... அவ்வளவுதான்.


நாம்தான் சிவில் சிவில் என்கிறோம். பறவைகள் என்ன இஞ்சினியருக்குப் படித்துவிட்டு வந்தா வீடு(கூடு?) கட்டுகின்றன?   கூடு கட்டுவதில் பறவைகளுக்கு உள்ள அறிவு நம்மை என்னமாய் வியக்க வைக்கிறது !
உடைந்த குச்சிகளைப் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துவந்து, ஒரு அழகான வீட்டை .காகம் எப்படியெல்லாம் கட்டுகிறது? சில சமயங்களில் காப்பர் கம்பிகளைக்கூட எடுத்து வந்து வளைத்து வளைத்து வலுவான கூடுகள் கட்டுமாம்.. காக்காவின் கூடு வடிவத்தில் ஒரு ஸ்டேடியமே ஜப்பானில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கரையான்களும், தேனிக்களும் வீடு கட்டுவதில் பட்டம் வாங்காத சிவில் இஞ்சினியர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். கரையான்கள் வீடு கட்டுவதோடு மட்டும் தன்னுடைய வேலையை முடித்துக் கொள்வதில்லை. கட்டி முடித்த பிறகு அதற்கு "ஏர் கண்டிஷனிங்க்" கும் செய்கின்றன.  எந்தக் காற்றுக்கும், எந்த மழைக்கும் அந்த வீடு இடிந்துவிடுவதில்லை. கலவைக்கு உண்டான காம்பினேஷனைக் கரெக்டாகப் போட்டு வீடு கட்டுவதில் கொத்தனாரை விடக் கரையான்கள் எக்ஸ்பர்ட். ஆனால்...   அப்படியெல்லாம் வசதி வாய்ப்போடு வீட்டைக் கட்டிமுடித்துவிட்டு  "ஹாயாக" ரெஸ்ட் எடுக்கலாம் எனத் துணை தேடும்போதுதான்.... நமது பாம்புக்கார அண்ணாச்சி ஆளும்கட்சி அரசியல்வாதி மாதிரி வந்து அந்த வீட்டைத் தனதுபெயருக்குப் பட்டா மாற்றிகொள்வார்.
பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல மிகமிக நுட்பமாகக் கூடு யாராலும் முடியாது. மெல்லிய நார்கள் மட்டும்தான் அதற்கு சிமெண்ட் செங்கல் எல்லாமே. மெல்லிய நார்களினால் பின்னப்பட்ட கூடு காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது. அந்தக் கூட்டுக்குள்ளேதான் எத்தனை ஆரோக்கியமான அறைகள். முட்டையிட்டு அடைக்காப்பதற்கு என ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு என்று தனியாக அறை..... சரி, இவ்வளவு வசதிகளோடு கூட்டைக் கட்டிவிட்டு மின்விளக்கு வசதி இல்லாவிட்டால் எப்படி?  அதற்காக மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுள் ஒட்டி வைத்து விடும். இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள் ரெடி. கரண்டு பில்லும் கிடையாது. 


அதேமாதிரிதான்... சிலந்திகளும் சிட்டுக்குருவிகளும் கூட! அவைகள் என்ன சிவில் இஞ்சினியரிங் முடித்துவிட்டு வந்தா தங்களுக்கு வீடுகட்ட ஆரம்பித்தன?  நம்மை மாதிரி  வசதியான பிளாட் தேடியா அலைகின்றன? வீட்டின் முகடோ, மரத்தின் கிளையோ... எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்துக்குத் தகுந்த மாதிரி எவ்வளவு சாதுர்யமாக டிசைன் போட்டுக் கட்டிமுடித்து விடுகின்றன?


படிப்பிலிருந்து மட்டுமல்ல.... பறவைகளிடமிருந்தும் நாம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது!                    --U.Prithvi...

15 August 2011

The Best Creator Next To God Is A Civil Engineer...



Engineering is a term applied to the profession in which a knowledge of the mathematical and natural sciences, gained by study, experience, and practice, is applied to the efficient use of the materials and forces of nature.


Engineers are the ones who have received professional training in pure and applied science. Before the middle of the 18th century, large-scale construction work was usually placed in the hands of military engineers. 

Military engineering involved such work as the preparation of topographical maps, the location, design, and construction of roads and bridges; and the building of forts and docks; see Military Engineering below. In the 18th century, however, the term civil engineering came into use to describe engineering work that was performed by civilians for nonmilitary purposes.

Civil engineering is the broadest of the engineering fields. Civil engineering focuses on the infrastructure of the world which include Water works, Sewers, Dams, Power Plants, Transmission Towers/Lines, Railroads, Highways, Bridges, Tunnels, Irrigation Canals, River Navigation, Shipping Canals, Traffic Control, Mass Transit, Airport Runways, Terminals, Industrial Plant Buildings, Skyscrapers, etc. Among the important subdivisions of the field areconstruction engineering, irrigation engineering, transportation engineering, soils and foundation engineering, geodetic engineering, hydraulic engineering, and coastal and ocean engineering.

Civil engineers build the world’s infrastructure. In doing so, they quietly shape the history of nations around the world. Most people can not imagine life without the many contributions of civil engineers to the public’s health, safety and standard of living. Only by exploring civil engineering’s influence in shaping the world we know today, can we creatively envision the progress of our tomorrows.

Careers
There is no one typical career path for civil engineers. Most people who graduate with civil engineering degrees start with jobs that require a low level of responsibility, and as the new engineers prove their competence, they are trusted with tasks that have larger consequences and require a higher level of responsibility. However, within each branch of civil engineering career path options vary. 
In some fields and firms, entry-level engineers are put to work primarily monitoring construction in the field, serving as the "eyes and ears" of senior design engineers; while in other areas, entry-level engineers perform the more routine tasks of analysis or design and interpretation. 
Experienced engineers generally do more complex analysis or design work, or management of more complex design projects, or management of other engineers, or into specialized consulting, including forensic engineering.